நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத்தெரியாத உண்மைகள்.

நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத்தெரியாத உண்மைகள். நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத்தெரியாத உண்மைகள். சித்திரை 1ஆடி 1ஐப்பசி 1தை 1இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா…? “சூரியன் உதிக்கும் திசை கிழக்கு”என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் […]

Continue Reading

பூணூல்  அணிவதன்  அர்த்தங்கங்கள்

பூணூல்  அணிவதன்  அர்த்தங்கங்கள் பூணூல்  அணிவதன்  அர்த்தங்கங்கள்  மற்றும்  பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்?. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒருப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது? என்பதை பற்றி நாம்  அனைவரும்  தெரிந்துகொள்வோம் பூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம்? பூணூல் இடது தோளில் அணிவதை “உபவீதம்” என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு  செய்யும்  காரியங்களுக்கு  பூணூல் இடது தோளில் (உபவீதமாக)  இருக்க வேண்டும்.  நம் முன்னோர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் வலது தோளில் இருக்க வேண்டும். […]

Continue Reading

குலதெய்வ வழிபாடு முறை

குலதெய்வ வழிபாடு முறை குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்து விடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும். குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது. பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் […]

Continue Reading

மோகனூர் அருள்மிகு ஸ்ரீ வள்ளியம்மன் கோவில் பெரும் பொங்கல் திருவிழா வரலாறு.

மோகனூர் அருள்மிகு ஸ்ரீ வள்ளியம்மன் கோவில் பெரும் பொங்கல் திருவிழா வரலாறு.

Continue Reading

கொங்கு 24 நாட்டு குலாலர் கோத்திரங்களும் அவர்களின் காணிகளும்.

கொங்கு 24 நாட்டு குலாலர் கோத்திரங்களும் அவர்களின் காணிகளும். காசிபரிஷி தென்கரைநாடு கோத்திரம் : சங்கர கவுண்டன்பாளையம், மூலனூர், மாம்பாடி, ஊதியூர், தூரம்பாடி, நீலம்பூர், பிரமியம், வீராட்சிமங்கலம், மணக்கடவு, ஆச்சிபூர் இவை முதலிய கிராமங்கள். வியாசரிஷி கோத்திரம் பூந்துறைநாடு : பூந்துறை, வெள்ளோடு, நசியனூர், பொன்காள மங்களம், கொளாநல்லி, எழமாத்தூர், பிடாரியூர், ஈங்கூர் பெருந்துறை, சாத்தனூர், கிழாம்பாடி மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, பழமங்களம், குலவிளக்கு, காகம், அரச்சலூர், விளக்கேத்தி, ஈஞ்சம்பள்ளி, சத்தியமங்கலம், சேமூர், ஈரோடு பேரோடு, சித்தோடு, திண்டல்புதூர், […]

Continue Reading

கொங்கு குலாலர் திருமணச் சடங்கு

கொங்கு குலாலர் திருமணச் சடங்கு கொங்கு குலாலர் திருமணச் சடங்குஆதாரம் குலாலர் திருமணத் திரட்டு 1933-ல் வெளியிடப்பட்டது.ஏழு நாள் கபாணத்திற்கு ஏற்பட்ட சீர்கள் 32, நிச்சய தாம்பூலம் : பெண் வீட்டாரும், மாப்பிள்ளை ஏகோபித்துக்கொண்டபின் உறவின் முறையார்களைக் கூட்டி வைத்து அவர்களிடம் திருமண விஷயங்களைத் தெரிவித்து முகூர்த்த நாள் குறித்து பந்துக்களுக்குத் திருமணப் பத்திரிகை யனுப்புவதோடு எல்லோருக்கும் தாம்பூலம் வழங்குதல். முகூர்த்த நெல் வேகவைத்தல் : குலதேவதைகளுக்குக் குடிக்காணிக்கை யெடுத்து வைத்துவிட்டு, சுபமங்கள, ஸ்திரீகளால் நெல்லைப் பாத்திரத்திலிட்டு […]

Continue Reading

மதுக்கரை பட்டயம்

மதுக்கரை பட்டயம் (மூலம்) கொங்கு நாட்டு சமுதாய வரலாற்றுக்கு இது மிகவும் முக்கியமான பட்டயமாகும் கொங்கு வெளியீடு 1974 – பக். 11 – 15, கொங்குநாட்டு சமுதாய ஆவணங்கள் 1991 – பக் 159-157 சுபமஸ்த்து சொஷ்த்திரி விசையாற்புதம் கலியுக சகாற்புதம் 4360 மேல் சாலியவாகன சகாற்புதம் 1317 விசைய வருஷம் மார்கழி மாதம் 17 தேதி தெட்ஜனாயம் பூருவபட்ஷ்சதிதியும் திருவோண நட்செதிரமும்ஞ் சுபநாம யோகமும் பாலவாகரணமும் கும்பலக்கினமும் பெற்ற கபதினத்தில் இந்த சாசனம் யெளுதினது.கலியுகம் […]

Continue Reading

திருநீலகண்டர் நாயனார்

திருநீலகண்டர் நாயனார் நன்றி – அருள்பெற்ற நாயன்மார்கள் இறைவன் களிநடனம் புரியும், தில்லைப்பதியிலே குயவர் குடியிலே – பிறந்தவர்தான் திருநீலகண்டர் என்பவர்.இவர் பொன்னம்பலத்து ஆடுகின்ற அம்பலக் கூத்தரின் திருவடிகளிலே மிகுந்த பக்தி கொண்டவர். அதுபோலவே, சிவன் அடியார்களிடம் எல்லையில்லா அன்பும், பக்தியும் உடையவர்.பொய் வாழ்க்கையை ஒழித்து, மெய் வாழ்க்கை வாழ்பவர். அறவழியில் வழுவாது நிற்பவர்.எம்பெருமானை திருநீலகண்டம் என்று எந்நேரமும் இடையறாது நெஞ்சம் உருகப்போற்றி வந்த காரணத்தால் இச்சிவனடியாரை திருநீலகண்டர் என்ற காரணப் பெயரிட்டு யாவரும் அழைத்து வரலாயினர்.இப்பெரியார், […]

Continue Reading

சாலிவாகணன் ஒரு வீர சகாப்தம்

சாலிவாகணன்ஒரு வீர சகாப்தம் ஆதாரம் குலாலர் களஞ்சியம், மற்றும் பல்வேறு தகவல் திரட்டுசாலிவனம் என்ற பெருங்கானகத்தில் ஞானசிய முனிவர் என்ற துறவி கடுந்தவமியற்றிக் கொண்டிருந்தார். உலகம் முழுவதையும் ஆளவேண்டும் என்பதும் எல்லா இன்பங்களையும் அடையவேண்டும் என்பதும் அவர் தவத்தின் நோக்கமாக இருந்தது.தவவலிமைக்கு கட்டுப்பட்ட காளிதேவி அவர் முன் தோன்றி, மாபெரும் யாகம் மேற்கொண்டு யாகத்தில் எரியும் ஓம குண்டத்தில் ஆயிரம் அரசர்களின் தலைகளை வெட்டி பலியிட்டால் உன் ஆசைகள் நிறைவேறும் என்று கூறி மறைந்தாள்.அவ்வாறே ஞானசீல முனிவர் […]

Continue Reading

ஸ்ரீ வள்ளியம்மன் ஊஞ்சல் பாட்டு

ஸ்ரீ வள்ளியம்மன் ஊஞ்சல் பாட்டு விருத்தம்:- வள்ளியம்மா என்றாலே வந்தவினை அகலும்…வள்ளியம்மா என்றாலே வருத்தங்கள் விலகும்…வள்ளியம்மா என்றாலே வானமழைப் பொழியும்…வள்ளியம்மா என்றாலே வையம் செழித்தோங்கும்… மோகனூர் வாழும் வள்ளியம்மா….யுகம் காக்கும் உத்தமியே…உன்அகம் குளிர்ந்து எங்களின் தாலாட்டைக் கேட்டருளி வழிகாட்டிஅருள்புரிவாய் வரமருள்வாய்…. பல்லவி:- ஆடுகிறாள் ஊஞ்சல் ஆடுகிறாள்… ஆனந்தமாய் ஊஞ்சல் ஆடுகிறாள்… பொன்னி நதி பாயும் கிழங்கு வளநாட்டில் கொங்கு குலதேவி ஆடுகிறாள்… அமாவாசை இரவினில் தாலாட்டு மேடையில், மோகனூர் வள்ளி ஆடுகிறாள்… முறை செய்யும் குயவர்கள் குலத்தினர் […]

Continue Reading